நெருப்பு மனிதர்கள்
உறவைத் துறந்தீர்
ஊரைத் துறந்தீர்
மலையைப் பிளந்திட வல்லீர்
விடலைப்பருவ மகிழ்வை
பகை அழிவின் ஒளியில் காண்பீர்
குடலைப் பருவ வயதில் விழி மடலில்
நெருப்புச் சுமந்தீர்
படலைக்கருகில் எதிரி வரவோ என்று
நீங்கள்
தேசப்புயலாய் எழுந்தீர்
உங்கள் செயலைக் கண்டு நாங்கள்
வடித்தோம் கவிதை வரிகள்
கருவேங்கை எனவாகித் தமிழீழக் கனவோடு
நடந்தவரே
சருகோடு சருகாகி பகை வீடு புகுந்தவரே
கருவாகி வந்து எங்கள் கவியிலே மலர்ந்தவரே
உருவாகித் தமிழீழம் உமைப்போற்றும்
ஒருகாலம் .
-வீரா- (போராளி)
Post a Comment