சுமந்திரனை தேற்கடிக்க வேண்டியது தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்..!

சுமந்திரன் - புதிய கதிர்காமர் - மைத்திரியுடனும் ரணிலுடனும் தனது இதயங்களை சங்கமித்து படகேறியிருப்பவர். வடமாகாண சபையில் தமிழின அழிப்பு தீர்மானம் வராமல் தடுப்பதற்கு முயன்றவர். மகிந்த ஆட்சிக்காலத்திலேயே இந்த தீர்மானம் வெளிவந்திருந்தால், சர்வதேச அளவில் மகிந்தவிற்கு பல நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், இனஅழிப்பு தீர்மானம் வடமாகாண சபையில் நேரகாலத்தோடு நிறைவேற்றுவதற்கு சுமந்திரன் முட்டுகட்டையாக இருந்ததால், மகிந்தவை சர்வதேச குற்றவாளிக் கூண்டை நோக்கி தள்ளுவது தாமதமடைகிறது. 

அன்று மகிந்தவை காப்பாற்றியவர், இன்று மைத்திரியையும் ரணிலையம் காப்பாற்றுவதற்காக, மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வெளிவரவிருந்த போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை பிற்போடுவதற்காக மும்முரமாக செயற்பட்டுள்ளார். இதற்காக ஜெனிவாவரை சென்றவர் சுமந்திரன்.

போர்குற்றம் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை சுமந்திரனின்; உடந்தையால் வெளிவராததால் நீதி கேட்டு தவித்திருந்த தமிழ் மக்கள் சோகத்திலும் ஏமாற்றத்திலும் மூழ்கிபோயிருந்தனர். ஆனால், சுமந்திரனோ சிங்கள அரசிடம் எலும்புத்துண்டை பெற்றுவிட்டு, அவுஸ்ரேலியாவுக்கு சென்று உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தை கண்டுகளித்தார். இவரா மக்கள் பிரதிநிதி? ரோம் தீப்பிடித்து எரிய பிடில் வாசித்த நீரோ மன்னனை விட மோசமானவர் அல்லவா இவர்? அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் உறவுகள் ஏங்கியபடியிருக்க, இவரோ மகிந்தவின் மகனோடு கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தவர். இவருக்கு எப்படி எங்கள் மக்களின் வலிபுரியும்? ஆகவே, வலி தந்தவனை மட்டுமல்ல, துணையாக இருப்வனையும் நாங்கள் தோற்கடிக்க வேண்டும்.  

சிங்கள ஆட்சியாளர்களுக்கு சுமந்திரன் சோரம் போவதால் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லையென கொதித்தெழுந்த புலம்பெயர் தமிழர்களை தமிழ் மக்களின் நலன்களுக்காக எதையும் செய்யவில்லை என்று சொன்னவர் சுமந்திரன்.முள்ளிவாய்க்கால் பேரலவத்தின் போது, சம்பந்தன் மாவை போன்றோர் ஒழித்திருக்க, மேற்குலக நாடுகளின் வீதிகளில் முதியோர், பெண்கள், சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளடங்கலாக பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் தொடர்ச்சியான போராட்ங்களில் ஈடுபட்டனர் அத்தகையவர்களை தமிழ் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்று சொன்னவர் சுமந்திரன். பனிப்பொழியும் காலத்தில் கடுங்குளிருக்கும் பலவாரங்களாக 2009ன் ஆரம்பத்திலிருந்து புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் நடாத்தியதை முழு உலகமும் அறியும். அப்படியான ஒரு போராட்டத்தையும், அந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் சுமந்திரன் கொச்சைபடுத்தியுள்ளார். முன்னர் தமிழர் உரிமைப் போராட்டத்தையும் அதற்காக உயிர்கொடுத்தவர்களையும் கொச்சைப்படுத்திய சுமந்திரன் இன்று போராட்டத்தின் முக்கிய தாங்குசக்தியாக உள்ள புலம்பெயர் தமிழர்களை அவமானப்படுத்துகிறார். ஆகவே, இத்தகைய சின்ன கதிர்காமர்களையும் அவரது நிலைப்பாட்டை ஏற்றுச் செயற்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் தோற்கடிப்போம். இது முள்ளிவாய்க்கால் மண்ணுக்குள் புதைக்கப்பட்டடுள்ள மக்களின் ஆத்மா சாந்தியடைய வழிவகுக்கக்கூடும்.  

தேர்தல் காலத்தில் தாயகம், தேசியம், தன்னாட்சி என்று முழக்கமிட்டு வாக்குப்பிச்சை கேட்டு வந்தவர், தமிழ் மக்கள் தமக்கு ஒரு நாட்டுக்குள் அதிகார பரவலாக்கத்திற்குத்தான் வாக்களித்தாக சொல்லுகிறார். தேர்தல் காலத்தில் ஒரு பேச்சும் ஏனைய நேரங்களில் இன்னொரு பேச்சும் பேசும் இவரை தோற்கடிப்பதற்கு மக்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்? 

2005 தொடக்கம் 2009 மே வரை யாழ்ப்பாணத்தில் காணமல் போன பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சித்திரவதையின் பின் படுகொலை செய்யப்பட்டமைக்கு பொறுப்பாக இருந்தவர் சிறீலங்கா புலனாய்வுத்துறை அதிகாரியான பிடிகேடியர் சக்கி. இவர் பணிப்பாளராக இருக்கும் வெரித்த ஆய்வு நிலையத்தில்தான் சுமந்திரனுக்கான அறிக்கைகள் எல்லாம் தயாhரிக்கப்படுகிறது।. படுகொலையாளர்களுடன் கூட்டணி அமைத்துள்ள சுமந்திரன் எமக்கு நீதியை பெற்றுத்தரமாட்டார். ஆகவே, அவரை நிராகரிக்க வேண்டும். புலிகளும் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டென்று சொல்லித் திரியும் சுமந்திரன், சிங்கள அரசாங்த்தை காப்பாற்றுவதற்கு துடிக்கிறார். அதற்காகத்தான் கடந்த சிறீலங்காவின் சுதந்திர தினத்தில் சுமந்திரன் தம்பதியருக்கு தனிப்பட்ட அழைப்பிதழ். சிறீலங்கா சுதந்திர தினத்தில் பங்குபற்றுதில்லையென்று முடிவு தந்தை செல்வா காலத்திலிருந்தே போற்றப்பட்டடு வந்தது। அதனை, தேசிய பட்டியல் உறுப்பினராக ஐந்து வருடங்களுக்கு முன் உள்நுழைந்த சுமந்திரன மீறியுள்ளார். இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு. இது தமிழ் மக்களின் மனதை தேனைப்படுத்தும் செயல் மட்டுமல்ல. மாறாக தமிழரசுக் கட்சியி உருவாக்கப்பட்டதன் கொள்கையையே குழிதோண்டி புதைக்கும் செயல்। இப்படியானவரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்தால் என்ன நடக்கும் என்பதை மக்களே சிந்தியுங்கள்! 

உரிமைகளை பெறுவதற்காக சுதந்திர வேட்கையோடு போர்க்களம் புகுந்து தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய தமிழ் இளைஞர்களை, வேலையில்லாததாலும் கல்வியில்லாததாலும் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் என்று சொன்ன சுமந்திரன் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தலாமா? உங்கள் பிள்ளைகளை மண்ணுக்காய் ஈர்ந்தவர்களே சிந்தியுங்கள் செயற்படுங்கள்! உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழ் இளைஞர்கள் சித்திரவதை செயப்பட்டது சர்வதேச ஊடகங்களியே வெளிவந்தது. ஆனால், அன்றிருந்த இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சவை காப்பாற்றும் முகமாக, ராஜபக்ச அரசாங்கம் புனர்வாழ்வை மிகவும் சிறப்பாக வழங்குகின்றதென்று புகழாரம் செய்தவர்

சுமந்திரனும் சம்பந்தரும் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடாத்தப்பட்டது என நீண்டகாலத்திற்கு முன்னர், ஒரு சில தடவை குறிப்பிட்டிருந்தனர். ஆயினும் சலுகைகளுக்கு விலை போனபின்னர் இனஅழிப்பு எனக்கூறுவது தமிழ் மக்களுக்கு பாதகமாக மாறும் எனக் கூறி அதிலிருந்து தம்மை தூரப்படுத்தி(27), மக்களை தவறாக வழிநடாத்த முற்பட்டுள்ளனர். இதனை முறியடிக்கும் முகமாகவே வடமாகாண சபையில் தமிழின அழிப்பு தீர்மானத்தை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நிறைவேற்றினார்.

நாங்கள் தமிழீழம் கேட்டவில்லை எனக் கூறும் சுமந்திரன்,  அர்ப்பணிப்புகளாலும் உயிர் ஆபத்து நிறைந்த போராட்டங்களாலும் அனைத்துலக மயப்பட்ட தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தை தற்போது உள்நாட்டு பொறிமுறைக்குள் முடக்குவதற்கு கொழும்பை மையமாக கொண்ட அவரது எடுபிடிகளுடனிணைந்து தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்। இதற்காக, சிறீலங்கா அரசாங்கத்தின் புலனாய்வுத்துறைக்கு முக்கிய பங்களிப்பு வழங்கும் ரொகான் குணரட்ண சுமந்திரனை பாராட்டி புகழாரம் சூட்டினார் யாழ் பல்கலைக் கழக சமூகமும், காணமற் போனோரின் உறவுகளும் உள்நாட்டு பொறிமுறையை நிராகாரிக்கிறோம், ஜனாதிபதி ஆணைக்குழுக்களில் எமக்கு நம்பிக்கை இல்லை, எமக்கு அனைத்துலக விசாரணையே வேண்டும் என போராட்டங்களை நடாத்திய போது, இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைக்குள் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற மாயையை சுமந்திரன் அனைத்துலக அரங்கில் உருவாக்கினார்.

இத்தகையவரே, தன்னால் தான் ஐ।நா விசாரணை நடந்தது என்ற தோறணையில் கூறிவருகிறார்। ஆனால், ஐ।நா விசாரணை 2012 ல் ஆரம்பித்த போது, அதனை மகிந்த ராஜபக்சவை காப்பாற்றுவதற்காய் எதிர்த்தவர் சுமந்திரன்। இதோ அவர் கொழும்பை மையமாகக் கொண்ட தெரண(26) என்ற ஊடகத்திற்கும் பிபிசி தமிழோசைக்கும்(17) வழங்கிய நேர்காணல்.

அவலைப்பெண் அனந்தி சசிதரன், நடந்தது இனஅழிப்பு। என் கணவரையும் இழந்துள்ளேன். ஆதலால், ராஜதந்திரிகளிடம் நீதி கேட்கப் போகிறேன் என்ற போது, அனந்தியை அதட்டி அடக்கியவர் சுமந்திரன். ஆனால், சிங்களவரோடு சேர்ந்து பெண்களுக்கு எதிராக வன்முறைக்காய் அணிசேர்ந்தார். எமது மக்களுக்காய் போராடாதவர் ஏன் எமது பிரதிநிதியாய் இருக்க வேண்டும்? 

அரசியல் கைதிகளை விடுவிக்கிறேன் என்று சுமந்திரன் பொய்யான தகவல்களை தெரிவித்ததை முன்னால் நீதியமைச்சரின் முரண்பட்ட தகவல் ஊடாக அறியமுடிந்தது. விசாரணையின்றி நீண்டகாலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வைத்து, தனது அரசியல் எதிர்காலத்திற்காக அரசியல் செய்யும் சுமந்திரன் எமக்கு தேவையா? 

ஒற்iயாட்சி என்று மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் போட்டால், தமிழ் மக்கள் மைத்திரிக்கு வாக்களிக்கமாட்டார்கள். ஆகவே, அந்த வாசகத்தை எடுப்பதே தமிழ்மக்களின் வாக்குகளை பெறுவதற்கு வழியமைற்கும் என சிங்கள பேரினவாதிகளுக்கு ஆலோசனை வழங்கியவர் சுமந்திரன்। சலுகைகளுக்கு விலைபோன சுமந்திரன் சிங்கள மக்களுக்கு விரும்பாத வார்த்தைகளை(6) தீர்வு திட்டத்தில் பயன்படுத்த வேண்டாம் என உரிமைக்காக போராடும் தமிழர்களுக்கு போதிக்க முற்பட்டவர்.

அத்துடன், மைத்திரி(8) ரணில் போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவார்கள் என்ற மாயையும் உருவாக்கினார். இதற்கெல்லாம் ஒரு துணையாக, தான் ஒரு தமிழன் என்ற அடையாளத்தை லக்ஸ்மன் கதிர்காமர் பாணியில் பயன்படுத்துகிறார். ஒரு தேசிய பட்டியல் உறுப்பினராக இருக்கும் போதே, தமிழினத்துக்கு எதிராக தீவிரமாக செயற்படும் சுமந்திரன், தமிழ் மக்களால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டால் எவ்வளவு பெரிய பாதிப்பு தமிழ் மக்களுக்கு ஏற்படும் என்பதை மக்களே சிந்தியுங்கள்। உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிப்பதற்கு துணைபோன சுமந்திரன், உரிமைப்; போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மண்ணிலிருந்து தெரிவுசெய்யப்படுவதென்பது, தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்தை நிராகரித்துவிட்டார்கள் என்ற தவறான செய்தியை சர்வதேசத்துக்கு தெரிவிப்பதோடு, சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களின் கீழ் தமிழ் மக்கள் வாழத் தயார் என்ற செய்தியையும் கொடுக்கும். ஆகவே, சுமந்திரனையும் அவரது முகவரி கொடுக்கிற தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தோற்கடிக்க வேண்டியது தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் கடமையுமாகும்.    

No comments