இன்று சாணக்கியன் முறையாம்?பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கு கோத்தபாய அரசு தனது கைங்கரியங்களை முன்னெடுத்துவருகின்றது.

அதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்பு வரை தேடி வாக்குமூலங்களை பெற்றுவருகின்ற நிலையில் இன்றைய தினம் தனது அலுவலகத்தில் ஆறு பொலிஸ் நிலையங்களை சேர்ந்த அதிகாரிகளினால் வாக்குமூலம் பெறப்பட்டதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மூதூர், காத்தான்குடி, கிளிநொச்சி, மாங்குளம், வாழைச்சேனை, மற்றும் சம்பாந்துறை காவல் நிலையங்களை சேர்ந்த காவல்துறையினர் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான ஆர்ப்பாட்டத்துக்கான விளக்கம் கோரினார்கள். எமது மக்களுக்கான போராட்டத்தின் தார்ப்பரியத்தை அவர்களுக்கு தகுந்த முறையில் எடுத்துரைத்தேன் என தெரிவித்துள்ளார் சாணக்கியன்.


No comments