இலங்கைக் கடற்பரப்பில் நான்கு பிரஞ்சுக் குடிமக்கள் கைது!


குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தினை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டுக்காக நான்கு பிரான்ஸ் குடிமக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒரு கப்டனும், இரண்டு ஆண்களும் மற்றும் ஒரு பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.

இந்த நான்கு நபர்களும் ஏழு நாட்களுக்கு முன்னர் பிரான்ஸிலிருந்து கப்பலின் மூலம் புறப்பட்டுள்ளனர், கப்பலின் எரிபொருள் பிரச்சினை காரணமாக அவர்கள் மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்தை நோக்கி கப்பலை செலுத்தியுள்ளனர்.

இதன்போதே அவர்கள் மிரிஸ்ஸ கடலோர காவல் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் மாத்தறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

No comments