பங்காளிகள் அவசர கூட்டம்!



தெற்கில் பொதுஜனபெரமுன பங்காளி கட்சிகளது ஆதரவு பாரிய வீழச்சியை கண்டுள்ளது.இந்நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றம் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று(19) பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜே.வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கம்யூனிஸ்ட் கட்சியின் காரியாலயத்தில் ஆளும் கட்சியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

No comments