விமல்வீரவன்சவின் குப்பைகளை கிளறும் சகபாடிகள்!பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கவேண்டும் என தெரிவித்த கருத்தால் அமைச்சர் விமல் வீரவன்சவை தொலைத்துக்கட்ட அவர் சார்ந்த கட்சி தரப்புக்களே களமிறங்கியுள்ளன.

அவர் தனது கருத்து தொடர்பில் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டுமென விடாப்பிடியாக உள்ளார் முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம். எனினும் தான் ஒருபோதும் மன்னிப்பு கோரமாட்டேன் என அடம்பிடித்து வருகின்றார் அமைச்சர் விமல்.

இந்த நிலையில் அமைச்சர் விமல் வீரவன்ச மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து ஊடக சந்திப்புக்களை நடத்தும்படி பொதுஜன முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் சில தினங்களில் அமைச்சர் விமல் பற்றி கடும் விமர்சனம், எதிர்ப்பு கருத்துக்களை முன்வைத்து ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்த மொட்டுக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் தயாராகி வருவதாக தெரியவருகின்றது.

இதன் தொடர்;ச்சியா விமலின் மனைவி வர்த்தகருடன் தப்பி வெளிநாட்டிற்கு ஓட்டமென செய்திகள் கசிந்ததாகவும் தெரியவருகின்றது.


No comments