யாழ்.சிறைக்கும் வந்தது கொரோனா!கொரோனா தொற்றில் தப்பிப்பிழைத்துவந்த யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ,தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 442 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இவர்களிலேயே 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 8 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.


No comments