கோத்தாவிற்கு எதிராகின்றன கத்தோலிக்க தரப்புக்கள்!


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான   ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை இழுத்து மூட தெற்கு முனைப்பு காட்டிவருகின்ற நிலையில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி கட்சி கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பேராயரின் ஆலோசனைக்கு அமைய இந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேராயர் உத்தியோகபூர்வ இல்லம் இதனை தெரிவித்துள்ளது.


தற்போது ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அடுத்த மாதம் 2 ஆம் திகதி இந்த சந்திப்பை நடத்துவதற்கு இதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான   ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அறிக்கையின் பல பகுதிகளை இருட்டடிப்பு செய்ய முற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுவருகின்றது.

இன்று(22) அக்குழு முதற் தடவையாக கூடவுள்ளது.கோத்தா சகோதரரான அமைச்சர் சமல் ராஜபக்ச தலைமையில் இக்குழு கூடவுள்ளது.


ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை ஆழமாக மதிப்பீடு செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அமைச்சரவை இணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 


இந்தக் குழுவில் சமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, உதய கம்மன்பில, ரமேஸ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.


எனினும் கோத்தா அரசை காப்பாற்ற பேராயர் முற்பட்டுள்ளதாக உள்ளிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சந்திப்பு இடைநிறுத்தம்,குழு கூட்டமென்பவை நடைபெறவுள்ளது.


No comments