அரசியல் தளத்தில் இறங்கினார் சகாயம்!

 


மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளிக் கொண்டு வந்தவர் சகாயம். பின்னர் மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வரும் சகாயம் சமீபத்தில் ஓய்வு பெற்றார். முக்கியமில்லாத பதவியில் பல ஆண்டுகளாக வைத்திருப்பதாக கூறிய சகாயம் இன்னும் பணிக்காலம் 3 ஆண்டுகள் இருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் விருப்ப ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் அரசியலுக்கு வருவதை உறுதி செய்த விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சென்னை, ஆதம்பாக்கத்தில் பொதுக் கூட்டத்தை கூட்டி உரையாடினார். அப்போது பேசிய அவர், “அன்புக்குரியவர்களே இரத்த துடிப்பு உள்ள இளைஞர்களே எல்லோரும் வாருங்கள், சேர்ந்து ஊழலற்ற புதிய தமிழகத்தை உருவாக்குவோம். அரசியல் கோபம் உண்டு. ஆனால் அரசியல் பதவி ஆசை இல்லை. நான் எந்த திரைப்பட நடிகரிடமும் பேசியதில்லை. அரசியல் களம் காண்போம். நான் ஏற்றுக்கொள்கிறேன். அரசியல் களம் காண்பதை ஆமோதிக்கிறேன். நான் உங்களோடு பயணிக்க ஆசைப்படுகிறேன். இளைஞர்களே கடைசி வரைக்கும் முழு நேர்மையாக, சாதியை உடைத்தெரிக்கிற லட்சிய நேர்மையாளர்களாக இருக்க வேண்டும்.மக்களுக்கு எளிய, நேர்மையான அரசியலை வழங்குவோம்

ஆவிகளை காட்டிலும் ஊழல் செய்யும் பாவிகள்
அதிகம் உள்ளனர் என எனக்கு தெரியும். நான் பதவிக்கு ஆசைப்பட்டது இல்லை, பதவி என்னை ஈர்க்கவில்லை” எனக் கூறினார்.

 

No comments