இந்தியவை ஆளும் நீங்கள் தனித்து போட்டியிட திராணி உண்டா; பாஜகவை வெளுத்த சீமான்!


தமிழகத் தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி என விறுவிறுப்பாக உள்ளன. வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலிலும் தனித்துதான் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் இந்தியாவில் பாஜக கர்நாடகம் வரை வந்து விட்டது. தற்போது அதிகாரத்தில் உள்ளதால் தமிழகம், புதுச்சேரியை குறி வைக்கிறது. முதலில் புதுச்சேரியை கைப்பற்ற நினைக்கிறது.

இதற்காகவே பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். அங்குள்ள முதல்வர் நாராயணசாமியை இதுவரை கிரண்பேடியை வைத்து செயல்பட விடாமல் தடுத்து வந்தனர். தேர்தல் நேரத்தில் துணைநிலை ஆளுநரை மாற்றி எப்படியாவது ஆட்சி அமைக்க நினைக்கிறார்கள் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே எந்த வேறுபாடும் கிடையாது. கட்சிதான் வெவ்வேறு. ஆனால் வெளியுறவு, பொருளாதாரம், பாதுகாப்பு என எல்லாவற்றிலும் கொள்கை ஒன்று தான். இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜக, நாம்தமிழர் கட்சியை போல் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயாரா என சவால் விடுத்தார்.

தமிழகத்தில் பல்வேறு சம்பவம் தொடர்பான வழக்குகளை அரசு திரும்பபெறுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என தமிழக முதலமைச்சர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கலவரத்தில் அதிக வழக்குகள் போடப்பட்டது நாம் தமிழர் கட்சியினர் மீதுதான். எனவே அதனை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் எனவும் சீமான் கோரிக்கை வைத்தார்.

 

No comments