சுமந்திரனிடமும் வாக்குமூலம்!பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியில் பங்கெடுத்தவர்களிடம் இலங்கை அரசு துரத்தி துரத்தி வாக்குமூலம் பெற்றுவருகின்ற நிலையில் சுமந்திரனிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் பேரணியில் கலந்துகொண்ட பெரும்பாலான அரசியல்வாதிகளிடம் பொலீசார் வாக்குமூலம் பெற்றிருந்த நிலையில் தற்போது அவரிடமும் பொலீசார் வாக்குமூலம் பெற வந்துள்ளனர்.

இதனிடையே வாக்குமூலமொன்றை வழக்குகின்றனரோ இல்லையோ அதனை புகைப்படமெடுத்து ஊடகங்களிற்கு அனுப்பி வைப்பது தொடர்கின்றது.இ

இந்நிலையில் இன்று தன்னிடம் வாக்குமூலம் பெறும் காவல்துறையினர் சகிதம் செல்பி எடுத்து வெளியிட்டுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். 


No comments