கோழி திருட்டில் இலங்கை இராணுவம்!

கொலை கொள்ளையென சாதனை புரியும் இலங்கை இராணுவத்தினர் புதிய சாதனையாக நான்கு கோழிகளைத் திருடியமை அம்பலமாகியுள்ளது.

திருட்டு தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவ வீரர் போத்தல பகுதியைச் சேர்ந்த அண்டுரட்வில பகுதியில் வசிப்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 2,500 ரூபாய் மதிப்புள்ள நான்கு கோழிகளை திருடியதாக போத்தலவின் வல்பிட்ட பகுதியில் வசிப்பவர் அளித்த புகாரைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


No comments