செட்டிக்குளத்தில் துப்பாக்கி சூடாம்?


செட்டிக்குளம் வன பகுதியில் இன்று காலை இராணுவத்தினருக்கும் ஆயுத தாரிகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.சந்தேகநபர் ஒருவர் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும்  சந்தேக நபர்கள் இருவர் தப்பியோடியுள்ளனர். 

இதனிடையே செட்டிக்குளம் வன பகுதியில் நேற்றைய தினம் இளைஞன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டினில் காயமடைந்த இளைஞன் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


வவுனியாவில் செட்டிக்குளம் பகுதியில் இராணுவத்தினருக்கும் ஒரு குழுவிற்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெரியவரவில்லை.


No comments