இணைந்து சிறப்பிக்கும் முஸ்லீம்கள்!பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அட்டாளைச்சேனையில் முஸ்லிம்களும் இணைந்துகொண்டனர்.

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள்,பௌத்த மயமாக்கல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி வடகிழக்கு மாகாண சிவில் அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைவாக பொத்துவிலில் இருந்து வாகன பேரணி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஆலையடிவேம்பில் இருந்து அட்டாளைச்சேனை ஊடாக மட்டக்களப்பு நோக்கி வருகை தந்தபோது அதற்கு ஆதரவாக பெருமளவான முஸ்லிம்களும் இணைந்துகொண்டனர்.

பெரிய கல்லாற்றை கடக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லீம் காங்கிரஸின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஹசன் அலியும் தம்மோடு இணைந்து கொண்டதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


No comments