வடக்கில் இலங்கையின் தேசிய கீதம்:தமிழிலா? சிங்களத்திலா?


இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளை கொழும்பை போன்று வடக்கிலும் முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து அனைத்து அரச அலுவலகங்களிலும் நாளை வியாழக்கிழமை சுதந்திர தினத்தை சிறப்பாக முன்னெடுக்க வடமாகாணசபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இலங்கையின் தேசிய கீதம் இம்முறை தனிச்சிங்களத்தில் மட்டுமே ஒலிக்க வேண்டுமென்ற உத்தரவின் மத்தியில் வடமாகாணசபை அதிகாரிகள் திண்டாடிவருகின்றனர்.

நாளை சனிக்கிழமை வடமாகாண ஆளுநர் அலுவலகத்திலும் யாழ்.மாவட்ட செயலகத்திலும் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் பங்கெடுக்க சிங்கள அமைச்சர்கள் வருகை தரவுள்ளனர்.

இதனிடையே வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் சுதந்திரதினமான நாளை (04) முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு, வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


No comments