சிங்களவர்களிற்கு பதவியுயர்வு,விடுதலை!இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் பேரில், 146 சிங்கள சிறைக் கைதிகள் இன்று(04) விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இராணுவத்தைச் சேர்ந்த 8,563 இராணுவத்தினக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கமைய இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


No comments