மூதூரில் விபத்து ஒருவர் பலி!


திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி 64ஆம் கட்டை பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி

விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர்-தாஹா நகரைச் சேர்ந்த முஹம்மது காசிம் முகம்மது சித்தீக் (70 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், தற்பொழுது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாக வைத்தியசாலை அதிகாரி தெரிவித்தார்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மூதூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments