நாளை போராட்டம்:ஈபிடிபி போராட்டமாகின்றது?

தமிழக மீனவர்களிற்கு எதிராக போராடவேண்டும் அதனை உடனடியாக போராடவேண்டுமென நிர்ப்பந்தங்களை பிரயோகிக்க தொடங்கியுள்ளார் அரச அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா.

ஒருபுறம் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் தயவுதாட்சண்யம் இன்றி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என குரல் கொடுக்கும் டக்ளஸ் மறுபுறம் தமிழக மீனவர்களிற்கு எதிரான நாளைய போராட்டத்தை பிற்போடுமாறான கோரிக்கையினை கூட ஏற்றுக்கொள்ளவில்லையென தெரியவருகின்றது.

ஈபிடிபி ஆதரவு மீனவ அமைப்புக்களிற்கு வழங்கப்பட்ட ஆலோசனையினையடுத்து சமாசத்தின் ஊடாக நாளை இந்திய தூதரகம் முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் பெரும்பாலான மீனவ அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமென்பவை அப்பாவி மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினால் கொல்லப்பட்டுள்ள நிலையில் போராட்டத்தை ஒத்தி வைக்க கோரியிருந்தன.

எனினும் நேற்று சிறீதர் திரையரங்கில் நடந்த சந்திப்பில் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த டக்ளஸ் உடன் திட்டமிட்டபடி நாளை ஆர்ப்பாட்டத்தை நடத்தவும் வலியுறுத்தியுள்ளார்.

தனது வடமராட்சி வடக்கு மீனவ அமைப்பு பிரதிநிதிகள் ஊடாக அழுத்தங்களை பிரயோகித்து சம்மேளனம்  ஊடாக போராட்டத்தை டக்ளஸ் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதுடன் மீனவர்கள் பேரில் கட்சி ஆதரவாளர்களை அழைத்துவர வாகன ஏற்பாடுகளையும் செய்ய நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 

தான் கடற்றொழில் அமைச்சராக இருக்கும் வரை எக்காரணத்திற்காகவும் தமிழக மீனவர்களிற்கு எதிரான போராட்டத்தில் தயவுதாட்சண்யம் காண்பிக்க கூடாது எனவும் டக்ளஸ் வலியுறுத்தியுள்ளார்.


No comments