இலங்கையை தாஜா பண்ணும் இந்தியா!ஒருபுறம் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை வேட்டையாட இன்னொருபுறம் டெல்லி இலங்கையினை தாஜா பண்ண முற்பட்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கொழும்பு கங்காராம விஹாரையில், சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார்.அத்துடன் அவர் பிக்குகளிற்கு தானம் வழங்கும் நிகழ்வில் பங்கெடுத்திருந்தார்.இதனிடையே இலங்கைக்கு இலவசமாக வழங்கப்படும், இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, ஒக்ஸ்போர்ட் எக்சாசெனியா கொவிசீல்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசிகள் அடங்கிய பொதிகள், விசேட விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளன.

ஆயினும் அதற்கு முன்னதாக சீனா இலவசமாக வழங்கிய 3இலட்சம் ஊசிகள் இலங்கையினை வந்தடையவுள்ளது.


No comments