நெல்லியடியில் விபத்து! ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேகக் கட்டுப்பாட்டையிழந்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து நெல்லியடி நகர் மக்கள் வங்கிக்கு முன்பாக இன்று  அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில், கரெவெட்டி ஊரைச் சேர்ந்த 41 வயதுடைய பேர்னாட் கரன்  என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.No comments