தொடங்கியது பேரரசர் கோத்தாவிற்கு குடைச்சல்?


கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் துறைமுக தொழில்சங்கங்கள் கிழக்கு முனையத்தை முழுமையாகத் துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் போராட்டத்தை நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்துக்குள் இருந்தே ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளனர்.

அரசாங்கத்துடன் இனிப்பேச்சுக்களை முன்னெடுப்பதில்லை என்பதையும் அவர்கள் தெளிவாக அறிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின்முதலீட்டுடன் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து துறைமுக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.

இந்நிலையில் துறைமுக விவகாரத்தை கையாள ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உபகுழுவின் இறுதித் தீர்மானத்தை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதுடன் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை முழுமையாக நிராகரிப்பதாகவும் இனிமேல் பேச்சுக்களை முன்னெடுக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துவிட்டனர்.


இதனையடுத்து கடந்த 26 ஆம் திகதியும் நேற்று முன்தினமும் துறைமுக தொழிற்சங்கங்கள் தமக்குள் பேச்சுக்களை முன்னெடுத்திருந்த நிலையில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் துறைமுக அதிகார சபையின் ஒருசில அதிகாரிகள்இ துறைமுகத்தின் வணிக செயல்பாடுகளில் ஈடுபடும் தேசிய நிறுவனங்கள் ஆகியவற்றைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.


இதற்கமைய நாளை வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு 23 தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து துறைமுகத்துக்குள் பெரும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதுடன்இ எதிர்வரும் திங்கள்கிழமை தொடக்கம் நாடளாவிய ரீதியில் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளனர்.


இனியும் அரசாங்கத்துடன் பேச்சுக்களை முன்னெடுப்பதில் பயனில்லை எனவும் 49 வீத உரிமம் இந்தியாவுக்கு செல்வது ஒட்டுமொத்த துறைமுகத்தையும் தாரைவார்க்கும் செயல்பாடு என்பதால் அரசாங்கத்தை வன்மையாகக் கண்டித்தே தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

No comments