இந்திய மீனவர்களது உடலங்கள் கையளிப்பு?


இலங்கை கடற்படை படகு மோதியதில் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களின் நான்கு சடலங்களை இலங்கை கடற்படை இன்று இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்துள்ளது.

இன்று காலை 10 மணியளவில் இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் இறந்த மீனவர்களது உடல்கள் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.கடற்படையினரால் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க கடந்த திங்களன்று இந்திய மீனவ படகு முற்படுகையில் இலங்கை கடற்படையின் வேகமான தாக்குதலால் நான்கு மீனவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா இலங்கை அரசாங்கத்துடன் வியாழக்கிழமை தனது வலுவான எதிர்ப்பை எழுப்பியமை தெரிந்ததே.


No comments