கந்தரோடை வற்றாக்கை அம்மன் ஆலயப் பகுதியை அபகரிக்க முயற்சி!!

யாழ்ப்பாணம் – கந்தரோடை, வற்றாக்கை அம்மன் ஆலய தீர்த்த கேணியை அண்டிய பகுதியில் உள்ள அரச மரம் தொடர்பில் இராணுவம் என்று கூறிவந்த சிலர் நேற்று விசாரணை மேற்கொண்டதால் அந்தப்

பகுதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நேற்று (22) காலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தி, ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணி, அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.அந்த கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்மானது என அவர்கள், பூசகரிடம் வினவியுள்ளனர்.

வற்றாக்கை அம்மன் ஆலயத்திற்கு எதிரில் தொன்மையான கேணியொன்று உள்ளது. அதனருகில் அரச மரம் உள்ளது.

இந்த நிலையில், நேற்று அங்கு சென்ற இராணுவம் என்று கூறிவந்த சிலர் நேற்று விசாரணை மேற்கொண்டதால் அந்தப் பகுதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியை வட்டமிட்டு நோட்டமிட்டனர். பின்னர் அந்தப் பகுதிகளை படம் பிடித்தனர். ஆலயப் பூசகரை தொடர்பு கொண்டு, அந்தக் காணி தனியார் காணியா அல்லது அரச காணியா எனவும் வினவினர்.

அது தனியார் காணியென பூசகர் பதிலளித்த பின்னரும், அது தொடர்பில் அவரைஇராணுவத்தினர் துருவிதுருவி விசாரணை நடத்தினர்.இதனால், பிரதேச மக்களிடையே அச்சநிலைமை தோன்றியுள்ளது.

இது குறித்து பிரதேச மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனிடம் முறையிட்டதன் அடிப்படையில், இன்று காலை அந்தப் பகுதிக்கு சென்று நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார்.அவருடன் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சுன்னாகம் பிரதேசசபை தவிசாளர் தர்சன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.கந்தோரடையில் தொல்பொருள் திணைக்கத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்து ஆலயத்தை சிங்களம் பேசும் நபர்கள் வந்து விசாரத்தமை ஊர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments