உருக்குலைந்த தோற்றப் படங்கள் பதிவேற்றம்! பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை!


சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் உருக்குலைந்த முகத் தோற்றத்தைக் கொண்ட படங்களை பதிவேற்றம் செய்த 19 வயதுடைய ஈரான் நாட்டுப் பெண் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் சஹார் தபர் பெயரில் செயற்படும் 19 வயதுடைய ஃபதேமே கிஷ்வந்த் என்ற பெண் ஜாம்பி போன்ற தோற்முடைய படங்களை பதவிவேற்றம் செய்தார். இதனால் வைரலாக பரவப்பட்ட படங்களால் அவர் முக்கியத்துவம் பெற்றார். குறுகிய காலத்தில் இன்ஸ்டாகிராமில் 486,000 பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தார்.

குறித்த பெண் மீது இளைஞர்களைக் கெடுத்ததாகவும், குடியரசிற்கு அவமரியாதை செய்ததாகவும் குற்றம் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. பின்வர் அவர் காவலில் வைக்கப்பட்டார். தன்னை விடுவிக்குமாறு கெஞ்சினார்.

ஒரு கட்டத்தில் தபர் தனது சில புகைப்படங்களில் ஒத்த நடிகர் ஏஞ்சலினா ஜோலியை தனது விடுதலைக்காக பிரச்சாரம் செய்ய அழைத்தார். இஸ்லாமிய குடியரசு பெண்களை துன்புறுத்திய வரலாறு உள்ளது. இந்த பாலின நிறவெறிக்கு எதிராக நாங்கள் ஒன்றுபட வேண்டும் என்றார்.

தபருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் முதலில் அவதூறு, வன்முறையைத் தூண்டுதல், பொருத்தமற்ற வழிமுறைகளின் மூலம் வருமானம் பெறுதல் மற்றும் இளைஞர்களை ஊழலுக்கு ஊக்குவித்தல் ஆகிய முன்வைக்கப்பட்டன. இவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தனக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளில் இரண்டில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்,  

மனநிலைபாதிக்கப்பட்டவர் என்று மருத்து சான்றிழத்கள் கூறுகின்றன. இதனைக் காரணம் காட்டி அவரின் தண்டணைக் காலத்தை குறைக்க அவரது சட்டவாளர் முயற்சிக்கின்றார். அவருக்கு முன்பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றிடம் கோரியுள்ளார்.

No comments