வலிகாமத்தின் உடுவில் கோட்ட பாடசாலைகள் முடக்கம்?கொரோனா தொற்றின் தொடர்ச்சியாக உடுவில் பிரதேசசெயலர் பிரிவு முடக்க நிலையினை சந்தித்துள்ள நிலையில் பாடசாலைகளை மூட மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது.வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட உடுவில் கோட்ட  பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

இதன் பிரகாரம் நாளை திங்கள் குடாநாட்டின் ஏனைய நான்கு கல்வி வலய பாடசாலைகளும் மீள கற்றல் செயற்பாட்டிற்காக முழுமையாக திறக்கப்படவுள்ளது.

வலிகாமம் கல்வி வலயத்தின் உடுவில் கல்வி கோட்ட பாடசாலைகள் மட்டும் நாளை முதல் திறக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.ஆயினும் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட சண்டிலிப்பாய் மற்றும் தெல்லிப்பழை கோட்ட பாடசாலைகள் நாளை இயங்கவுள்ளது.


No comments