கொரோனா பாணி:கைவிட்ட இலங்கை அரசு?


தம்மிக பண்டார என்ற நபரால் சிங்கள நபரால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு பானத்தை இதுவரை தாம் ஏற்றுக்கொள்ளவில்லையென இலங்கை அரச அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‘போசணை நிறைந்த ஆயுர்வேத பானம்’ என்ற அடிப்படையிலேயே நாம் பரிந்துரை செய்தோம்.எனினும் அது உரிய மருத்துவ மற்றும் இரசாயனப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே மருந்துப்பொருளாக அறிவிக்கப்படும் என்று இலங்கை சுதேச மருத்துவமுறை மேம்பாடு மற்றும் ஆயுர்வேத மருத்துகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

தம்மிக பண்டாரவின் கொரோனா தடுப்பு மருந்தை நான் அதனை அருந்துவதற்கு சபாநாயகருக்கு மாத்திரமே அழைப்புவிடுத்தேன். ஒட்டுமொத்த பாராளுமன்றத்துக்கும் அதனை வழங்கவில்லை.

அத்தோடு போசணை நிறைந்த ஒரு ஆயுர்வேத பானம் என்ற அடிப்படையிலேயே நாம் அதனை வழங்கினோம். நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுர்வேத பானங்கள் மற்றும் உணவுகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தேவையற்ற அச்சத்தை விதைத்து வருகின்றனர்.

ஆனால், அவ்வாறு அச்சப்படுவதற்கான எந்தவொரு அவசியமும் இல்லை. அந்த ஆயுர்வேத பானம் உரிய மருத்துவ மற்றும் இரசாயனப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே மருந்தாக மாறும்.

அதற்கு குறித்தவொரு காலம் அவசியமாகும். அத்தோடு தம்மிக பண்டார மாத்திரமன்றி எமது நாட்டிலுள்ள மேலும் பல ஆயுர்வேத நிலையங்களும், மருத்துவர்களும் தமது உற்பத்திகளைக் கையளித்திருக்கின்றனர். அவை தொடர்பிலும் நாம் விசேட கவனம் செலுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

ஆயினும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதனை அருந்தியதும் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் மருந்து கோரி திரண்டதும் குறிப்பிடத்தக்கது.


No comments