யாழ் குளிர்களி நிலையத்தில் தீ விபத்து


யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பருத்தித்துறை வீதுியில் அமைந்துள்ள பழமுதிர்ச்சோலை குளிர்களி நிலையத்தின் சமைலறையில் தீ பற்றியொிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

தீ பற்றியொிவதை அவதானித்த காவல்துறையினர் யாழ் மாநகர தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வண்டி.

தீயணைப்பு வீரர்களால் தீ ஏற்பட்ட குறித்த பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் தீ விபத்து குறித்த விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.


No comments