யேர்மனியில் புதன்கிழமை முதல் வருகிறது புதிய பூட்டுதல் கட்டுபாடுகள்


யேர்மனியில் தளர்வான கொரோனா கட்டுப்பாடுகள் தோல்வியடைந்ததால் கொரோனா தொற்றுக்கள் மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

இதனால் எதிர்வரும் புதன்கிழமை முதல் கடுமையான பூட்டுதலுக்குரிய புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளது புதிய கட்டுப்பாடுகள் அடுத்தாண்டு சனிவரி 16 ஆம் நாள் வரை நீடிக்கவுள்ளது.

அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்படவுள்ளன. பள்ளிக் குழந்தைகள் வீட்டிலேயே இருக்க ஊக்குவித்துள்ளனர். புத்தாண்டுக்கான ஒன்று கூடலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடைகள் குறித்து யேர்மனி அதிபர் அங்கேலா மேர்க்கெல் ஜேர்மனியின் 16 மாநிலங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

சுகாதார அமைப்பு மீதான அழுத்தங்களும் அதிகரிக்கும் என  மேர்க்கல் எச்சரித்தார்.


No comments