பசிபிக் கடலில் ஏவுகணைகள் சோதனை செய்தது ரஷ்யா!!


ரஷ்யா பசிபிக் கடற்பரப்பில் அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.

நேற்று சனிக்கிமை அணு ஆயுதங்களைக் காவிச் செல்லும் விளாடிமிர் மோனோமக் என்ற அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பலிலிருருந்து கடலுக்கு அடியிலிருந்து நான்கு புளாவா (Bulava) வகை ஏவுகணைகளைச் சோதனை செய்து பார்த்திருந்தது. ஏவுகணைகள் சில ஆயிரம் கிலோமீற்றர்கள் பறந்து சென்று இலக்கை அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் கடற்படையின் விளாடிமிர் மோனோமக் நீர்மூழ்கிக் கப்பல் ஓகோட்ஸ்க் கடலில் நீருக்கடியில் இருந்து ஏவப்பட்ட நான்கு புலாவா ஏவுகணைக வடமேற்கு ரஷ்யாவில் உள்ள ஆர்க்காங்கெல்ஸ்க் பிராந்தியத்தில் 5,500 கிலோமீட்டர் (3,400 மைல்களுக்கு மேல்) சென்று போலியாக வைக்கப்பட்ட கப்பல்களைத் தாக்கி அழித்ததாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது ரஷ்யாவின் பொிய அணுசக்தி மோதலின் பிரதிபலிப்பையும், அணுசக்தி தடுப்பின் செயல்திறனையும் நீரூபிக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமொிக்கா - ரஷ்யா இடையிலான அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் எதிர்வரும் பெப்ரவரி காலாவதியாகவுள்ளது. எனினும் இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை நீடிப்பது குறித்து விவாதித்தன. எனினும் அது சாத்தியப்படவில்லை எனக் கூறிப்படுகிறது.

நியூ ஸ்டார்ட் New START ஒப்பந்தம் 2010 இல் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் ஆகியோரால் கையெழுத்தானது. 

இந்நிலையில் ரஷ்யா தனது அணுசக்தி இராணுவப் பயிற்சிகளை அண்மைக்காலமாக விரிபடுத்திவருகின்றமை மேற்கத்தை நாடுகளின் உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

No comments