பிரான்சில் 3 காவல்துறையினர் சுட்டுக்கொலை!


மத்திய பிரான்சில் புய்-டி-டோம் நகரில் இன்று புதன்கிழமை வீட்டில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு அழைப்பு ஏற்பட்டுத்தப்பட்டிருந்தது. விசாரணைக்காக வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் மீது துப்பாக்கிதாரி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை அதிகாலையில் செயிண்ட்-ஜஸ்டுக்கு அருகிலுள்ள தொலைதூர  புய்-டி-டோம் கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.

48 வயதுடைய துப்பாக்கிதாரியான சந்தேக நபர் ஏற்கனவே குழந்தையை தடுத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் அறிந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முதலில் துப்பாக்கிதாரி ஒரு அதிகாரியைக் கொன்றார், மற்றொருவரைக் காயப்படுத்தினார். பின்னர் அவர் வீட்டிற்கு தீ வைத்தார். மேலும் இரண்டு அதிகாரிகளை அவர் கொன்றார்.

வீடு முற்றாக எரிந்துள்ளது. சந்தேசநபர் இறந்த நிலையில் காணப்பட்டார் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காவல்துறை அதிகாரிகளின் குடும்பங்களின் வருத்தத்தை தேசம் பகிர்ந்து கொண்டதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.

No comments