உதயனிற்கு தொடர்ந்தும் குடைச்சல்?


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது ஒளிப்படத்தையும் சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையான உதயன் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு மார்ச் 21ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26ஆம் திகதி அவரது ஒளிப்படைத்தையும் சொற்களையும் பயன்படுத்தி பத்திரிகையில் வெளியிட்டமை  1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு உள்பட்டு தண்டனைக்குரிய குற்றம் புரியப்பட்டுள்ளது என்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பம்  இம்மாத ஆரம்பத்தில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் சந்தேக நபர் தொடர்பில் மன்றுக்கு அறிக்கையிடப்படும் என்று பொலிஸார் சமர்ப்பணம் செய்துள்ளனர்.

No comments