கூட்டமைப்பிற்கு முன்னணி ஆதரவு?


யாழ்.மாநகர முதல்வராக இமானுவேல் ஆனோல்;ட் மீண்டும் முன்னிறுத்தப்பட்டால் தாம் ஆதரிக்கப்போவதில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பு அறிவித்துள்ளது.அதேபோன்று நல்லூர் பிரதேசசபை தவிசாளரும் மாற்றப்படவேண்டுமெவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக பொருத்தமான புதியவர் ஒருவர் பிரேரிக்கப்பட்டால் ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஆயினும் தமது கட்சி யாழ்.மாநகரின் முதல்வர் பதவிக்கோ நல்லூர் பிரதேசசபையின் தவிசாளர் பதவிக்கோ போட்டியிடப்போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி, யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட்டால்; முன்வைத்த போது, அது 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து முதல்வர் பதவி வறிதாக்கப்பட்டது.

அந்தப் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று புதன் கிழமை மாலை யாழ்ப்பாணம் - மார்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.

பின்னர் எதிர்வரும் 26 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூடி முதல்வர் வேட்பாளர் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments