அமைதியான பண்டிகை போதும்?

எதிர்வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றது. இச்சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாகப்பரவி

வருகின்றது. அதிலும் தற்பொழுது யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் சந்தைக்கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுகின்றது என வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே குறுகிய காலத்தில் மிக அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று நோயினால் நாட்டில் பல இறப்புகளும் அடுத்தடுத்து ஏற்பட்டுவருகின்றன. இந்நிலையில் பண்டிகைகளுக்காக பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் பொழுது இந்நோய் எமது பிரதேசத்திலும் மேலும் தீவிரமாகப் பரவும் வாய்ப்புள்ளது. எனவே இப் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் தேவையற்ற ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பதுடன் மத வழியாடுகளில் ஈடுபடும் போது கட்டாயமாக முகக் கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியையும் பேணுதல் வேண்டும். அனைவரும் இப்பண்டிகைக் காலத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம்; உங்களையும் உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவரையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

எனவே நாம் அனைவரும் சமூகப் பொறுப்புடன் அமைதியாக வீட்டிலிருந்து எமது பண்டிகைகளைக் கொண்டாடுவோம் என வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

No comments