பராமரிப்பு இல்லங்களில் முதியவர்களை கட்டித்தழுவ புதிய ஏற்பாடு அறிமுகம்!

கொரோனா தொற்று நோயின் காரணமாக பராமரிப்பு இல்லங்களில் பராமரிக்கப்பட்டுவரும் பெற்றோர்களை நோில் சென்று பார்வையிட முடியாத பிள்ளைகள் மற்றும்

உறவினர்கள் திறன்பேசிகளில் காணொளிகள் மூலம் உரையாடி வந்தனர். 

இந்நிலையில் இதற்குத் தீர்வாக பிரான்சில் புதிய குமிழி போன்று கோளவடிவின் நடுவே பிராஸ்டிக் திரையினால் பிரிக்கப்பட்ட அறையில் உறவினர்கள் தொட்டு உணர்ந்து கட்டித்தழுவும் வகையில் புதிய ஏற்பாடுகளை பராமரிப்பு இல்லங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திரையில் கையுறைகள் காணப்படுகின்றன. அதன் ஊடாக உறவினர்கள் கட்டித்தழுவி தொட்டு உரையாடும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சந்திப்புக்குப் பின்னரும் குறித்த இடம் மற்றும் பகுதிகள் கிருமி தொற்று நீக்கம் செய்யப்படுகிறது என ஏ.எவ்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments