யாழ் மற்றும் கிளிநொச்சி பாடசாலைகளிற்கு பூட்டு?மழை எச்சரிக்கை மத்தியில் கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரும் வரைக்கும் மூடுமாறு வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

வெள்ளங்காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் பாடசாலைகள் பலவற்றிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதையடுத்தே அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனிடையே மன்னார் வளைகுடாவில் வலுக்குறைந்து தாழமுக்கமாக மாறியுள்ள புரேவி புயலானது கடற்பகுதியில் அழிவடைந்து வருகின்றது.

எனினும் எதிர்வரும் புதன்கிழமை வரை வடக்கு மாகாணத்திற்கு மழை கிடைக்க வாய்ப்புண்டு.

இன்று மாலை அல்லது இரவு அல்லது நாளைக் காலை திங்கட்கிழமை வடக்கு மாகாணத்திற்கு கனமழை கிடைக்க வாய்ப்புண்டு. மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியமானதென அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments