மணிவண்ணன் யாழ்.மாநகர முதல்வர்!



யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வராக சட்டத்தரணி விஸ்லிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் விட ஒரு மேலதிக வாக்குகளைப் பெற்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவாகியுள்ளார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சட்டத்தரணி வி.மணிவண்ணன், 21 வாக்குகளைப் பெற்று முதல்வராகத் தெரிவானார்.

எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான ஆனல்ட் 20வாக்குகளைப் பெற்றார்.

யாழ்.மாநகர சபையில் அங்கம் வகிக்கும் 45 உறுப்பினர்களில்  தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் மகாலிங்கம் அருள்குமரன்   மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் 3 உறுப்பினர்கள்  நடுநிலை வகித்தனர்.

மீதமான 41 உறுப்பினர்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 10 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள் உட்பட 21 உறுப்பினர்கள் வி.மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்கினார்கள். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் , தமிழர் விடுதலை கூட்டணியின் ஒரு உறுப்பினரும் உள்ளடங்கலான 20 உறுப்பினர்கள் இமானுவேல் ஆர்னோல்ட்க்கு ஆதரவு வழங்கினார்கள். 

அதனை அடுத்து ஒரு வாக்கு வித்தியாசத்தில் சடடத்தரணி வி. மணிவண்ணன் யாழ்.மாநகர சபையின் முதல்வராக தெரிவானார்.  

No comments