உயிரிழந்து உலகின் ஒரே ஒரு வெள்ளை நிறக் கிவிப் பறவை

 

உலகிலேயே வெள்ளை நிறம்கொண்ட அரியவகைக் கிவிப் பறவை இறந்துவிட்டது.

மானிகுரா என்று பெயரிடப்பட்ட குறித்த வெள்ளை நிற கிவி கடந்த ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்துவிட்டதாக, நியூசிலாந்தின் தாரருவா மாவட்டத்தில் அமைந்துள்ள பெக்காஹா தேசிய வனவிலங்கு மையத்தின் சமூக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கிவி டிசம்பர் 2020 ஆரம்பத்தில் சாப்பிடவில்லை என்பதல் அதன் எடை குறைந்துகொண்டே இருந்தது. அதன் காரணமாக கிவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்கு சத்திரசிகிற்சை செய்யப்பட்டது. பின்னர் அது உயிரிழந்துள்ளது.

பிரவுன் கிவி மே 2011 இல் பெகாஹாவில் குஞ்சு பொரித்தது. அரிய மரபணு பண்புடன் தரமான பழுப்பு நிறத்திற்கு பதிலாக வெள்ளை இறகுகள் ஏற்பட்டன. அக்குஞ்சே மானிகுரா என்று அழைக்கப்பட்டது.

No comments