மருதனார்மடம் 38:பாடசாலைகள் பூட்டு?மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் மேலும் ஜவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இ;ன்று மாலை ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஏழாலையைச் சேர்ந்த மூவர் மற்றும் இணுவிலைச் சேர்ந்த இருவரென ஜந்து பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனால் மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உள்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இன்று வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட உடுவில் மற்றும் தெல்லிப்பழை கல்விக் கோட்டப் பாடசாலைகள் இன்று திங்கட்கிழமை மூடப்பட்டன.

இந்நிலையில் வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உள்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.


No comments