ஒற்றுமை வேண்டும்:இன்பம்?

 


தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைக்கும் விடயத்தில், அனைத்து தரப்பினரும் ஒரே நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் இன்பம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகள் விவகாரத்தில் தமிழ் கட்சிகளது போக்கினை வன்மையாக கண்டித்த அவர் இவ்வாறான பல பாரிய பிரச்சினைகள் உள்ள போது சிலர் உள்ளுராட்சி மன்ற கலைப்பு,ஆதரவென மலின அரசியலிலும் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தார்.No comments