கொரோனாவை கட்டுப்படுத்த யாழிலும் ஆமி,பொலிஸ்?யாழில்  சுயதனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடாதவாறு இராணுவம் மற்றும் காவல்துறையின் உதவியை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.குடாநாட்டில் கொரோனா பரவல் முனைப்படைந்துள்ள நிலையில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மாவட்ட செயலர்; க.மகேசன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

தற்போதைய நிலைமையில் யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படுத்தலில் உள்ளோரின்  எண்ணிக்கை 5000 பேரை தாண்டியுள்ளது.அத்தோடு தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

நேற்றைய நிலவரத்தின் படி 2275 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

ஆயினும் தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில்  நடமாடுவதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார் .சுகாதாரப் பிரிவினர் மற்றும் காவல்துறையினை மீறி அவர்கள் வெளியில் நடமாடுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதாக முறையிடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.


No comments