யாழ்.பல்கலை நினைவுதூபி பக்கம் அதிகாரிகள்?


 

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை சந்திக்க வந்த படை அதிகாரிகள் நினைவுதூபிகளை பார்வையிட ஆர்வம் காட்டியமை பரபரப்பினை தோற்றுவித்திருந்தது.

யாழ்.பல்கலைக்கழகம் விடுமுறை காரணமாக இ;ன்று மூடப்பட்டிருந்த நிலையில் கோப்பாயிலுள்ள இலங்கை இராணுவத்தின் 52வது படை பிரிவை சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று துணைவேந்தரை நட்புறவின் பேரில் சந்திக்க வருகை தந்திருந்ததாக கூறப்படுகின்றது.

அவ்வாறு வருகை தந்த குழுவினர் அங்குள்ள நினைவுதூபிகளை பார்வையிட ஆர்வம் கொண்டிருக்க பல வித கதைகளுடன் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ஆனாலும் துணைவேந்தருடன் நினைவுதூபிகளை பார்வையிட்டதுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்ட அதிகாரிகள் வெளியேறிருந்தனர்.

ஆனாலும் படை அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்த போது வெளியார் உள்ளே வருகை தரப பல்கலைக்கழக பாதுகாவலர்கள் அனுமதித்திருக்கவில்லை.


No comments