பொதுசுகாதார பரிசோதகர்களிற்கும் வந்தது?


கம்பஹா மாவட்டத்தில் கடமையாற்றிய பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதக மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வத்தள சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கடமையாற்றிய பொது சுகாதார பரிசோதக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கடமையாற்றிய வத்தள சுகாதார வைத்திய அதிகாரிகள அலுவலகத்தின் 5 சுகாதார பரிசோதகர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பொது சுகாதார பரிசோதக மாணவனுடன் கடமையாற்றிய மேலும் 21 பொது சுகாதார பரிசோதக மாணவர்கள் வேயங்கொட நைவல பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments