இரட்டைக்கொலை! பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு!


இரட்டை கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு இன்று (07) சூம் தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்றது.

அதாவது, சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றுக்கு அழைத்துவராமல் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான், சூம் தொழில்நுட்பம் ஊடாக வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

இதன்போது பிரசாந்தனை எதிர்வரும் டிசம்பர் 21ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவினை பிறப்பித்தார்.

No comments