கைது: தடை பெற்றார் நிரோஸ்?

தன்னை கைது செய்வதற்கு எதிராக முன் பிணையினை பெற்றுள்ளார் வலிகிழக்கு பிரதேசசபை தலைவர் நிரோஸ்.

இலங்கை காவல்துறையினர்  கைது செய்வதற்காக வலி.கிழக்கு பிரதேசசபையில் காத்திருக்க மறுபுறம் யாழ்.நீதிவான் நீதிமன்றத்திற்கு சென்றிருந்ததுடன் கைது செய்வதற்கு எதிராக முன் பிணை பெற்றுள்ளார் நிரோஸ்.

இதனிடையே நிரோஸிற்கு ஆதரவாக ஏனைய உள்ளுராட்சி மன்ற தலைவர்கள்,கே.சிவாஜிலிங்கம் மற்றும் தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம்  உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்து வலி.கிழக்கு பிரதேசசபைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.   


No comments