நெடுந்தீவு இந்திய மீனவர்கள் பக்கம்?நெடுந்தீவு கரையை அண்மித்த கடலில் நேற்று பெருமளவிலான இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி மீனபிடியில் ஈடுபட்டுள்ளன

வடக்கில் அத்துமீறும் இந்திய இழுவைப்படகுகள் தொடர்ந்தும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதுகுறித்து மீனவர்கள் தரப்பில் முறையிடப்பட்டு வந்த போதிலும் அரசு தரப்பில் அதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று பிற்பகல் வேளையில் நெடுந்தீவு கரையில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரம் வரை அத்துமீறி பெருமளவு இந்திய இழுவைப்படகுகள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டன.

கரையோ சிறு மீன்பிடியில் கிடைக்கும் வருவாய் மூலம் வாழ்வாதாரத்தை நகர்த்தும் நெடுந்தீவு மீனவர்களை வறுமைக்குள் தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இரட்டைமடி மூலம் சின்ன குஞ்சு மீன்களைக் கூட விட்டு வைக்காது வழித்துத்துடைத்து செல்வது மட்டுமல்லாது மீனவர்களின் பெருமளவு வலைகளையும் அறுத்துச் செல்கின்றனர்.

No comments