பல ஆண்டுகள் தடுப்புக்கு பின்பு விடுவிக்கப்படும் அகதிகள்


ஆஸ்திரேலிய அரசினால் பல ஆண்டுகளாக தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அகதிகளில் 5 பேர் விடுதலைச் செய்யப்படுவகதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஏற்கனவே 3 அகதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், 2 அகதிகள் சில தினங்களில் விடுவிக்கப்பட உள்ளனர். 

இவர்கள் தற்காலிக Bridging விசா வழங்கப்பட்டு விடுவிக்கப்படுவதாக Refugee Advocacy Network அமைப்பு தெரிவித்துள்ளது. 

இவ்வாறு விடுவிக்கப்படும் அகதிகளில் ஒருவரான குர்து அகதி பர்ஹத் பந்தேஷ், சுமார் ஏழரை ஆண்டுகளுக்கு பின்னர் குடிவரவுத் தடுப்பிலிருந்து தான் விடுவிக்கப்படுவது குறித்து பெரும் மகிழ்ச்சி கொண்டுள்ளார். 

என்னால் இதை நம்பவே முடியவில்லை. மீண்டும் பிறந்தது போல் இருக்கிறது. நான் இப்பொழுது சுதந்திர மனிதன். என்னை காவல் காக்க இனி காவலாளிகளும் கிடையாது,” என ஆஸ்திரேலிய தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் குர்து அகதியான பர்ஹத் பந்தேஷ். 

2013ம் ஆண்டு படகு வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த இவர் மனுஸ்தீவு சிறையில் 6 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர் ஜூலை 2019யில் முதல் சுமார் 1 ஆண்டுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

No comments