32?:சந்தேகத்தில் சத்தியமூர்த்தி?கொரோனா தொற்று உறுதியானதையடுத்து உடுவில் பிரதேச செயலர் பிரிவு முழுவதும் இன்றிரவு முதல் உடனடியாக முடக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இதனிடையே சர்ச்சைக்குரிய வகையில் யாழ்ப்பாணத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை அனுராதபுரத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டமை பலத்த சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒரு தகவலை வெளியிட அதற்கு மறுதலிப்பாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தகவல்களை வெளியிட்டுவருகிறார்.
இது குறித்து யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்

 இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 300 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 6 பேர் மட்டுமே மருதனார்மடத்தில் நேற்றைய தினம் தொற்று உறுதிசெய்யப்பட்டவரின் மனைவி மூன்று பிள்ளைகள் மற்றும் இரண்டு உறவினர்கள் அடங்குவார்கள். (அனைவரும் ஒரே வீட்டில் வசிப்பவர்கள்)

2 பேர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள்.

No comments