நிலவில் தரையிறங்கி கொடி நாட்டிய சீனாவின் விண்கலம்!


நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்யும் நோக்கில்  சீனா சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை கடந்த 24-ம் தேதி விண்ணில் செலுத்தியது. லாங் மார்ச் 5 ராக்கெட் என்ற ராக்கெட் மூலம் சேஞ்ச் 5 விண்கலம் நிலவுக்கு புறப்பட்டது.


இந்நிலையில், சேஞ்ச் 5 விண்கலம் நேற்று (டிசம்பர் 4) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பின் விண்கலத்தில் இருந்து வெளியே வந்த ரோவர் இயந்திரம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக இயங்கத்தொடங்கியுள்ளது.
 
அதனை உறுதிப்படுத்தும் படி ரோவரில் சீன விண்வெளி விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்டிருந்த சீனவின் தேசிய கொடி நிலவின் மேற்பரப்பில் நாட்டப்பட்டது.

இதன் மூலம், நிலவில் கொடி நாட்டிய இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றது. நிலவில் பாறை துகள்களை எடுத்துக்கொண்டு சேஞ்ச் 5 விண்கலம் இம்மாத இறுதிக்குள் பூமிக்குத் திரும்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 

No comments