கொவிட் தாண்டி எழும் யாழ்.நகர கட்டடம்



கடந்த ஆட்சியில் (2019) செப்ரெம்பர் 7 இல் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மாநகர மண்டபத்தின் (Jaffna Town Hall ) கட்டுமானப் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகிறது்.

யாழ்ப்பாணம் மாநகர முன்னாள் மண்டபம் அமைந்திருந்த வளாகத்தில் புதிய மண்டபம் 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்படுகிறது.

உள்நாட்டு போர் காரணமாக 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் அழிவடைந்த யாழ்ப்பாண மாநகர சபையின் நிரந்தர மண்டபத்தை மீளவும் புதிதாக நிர்மாணிப்பதற்கு 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா நிதி நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த சம்பிக்க ரணவக்க ஊடாக ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments