பாரதிய ஜனதா அழைப்பின் பேரில் சென்றோம்!
இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில், ஜனதா விமுக்தி பெரமுனவின் தேசியப் பொதுச் செயலாளர் உட்பட நாங்கள் ஐவர் இந்தியாவின் புது தில்லியில் சென்றிருக்கினறோம் என தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்து புதிய தோழர் கபிலன்.
தில்வின் சில்வா - ஜனதா விமுக்தி பெரமுனவின் தேசியப் பொதுச் செயலாளர்.
அபுபக்கர் அத்தம்பாவா - நாடாளுமன்ற உறுப்பினர், .
சந்திரிகா அதிகாரி - ஜனதா விமுக்தி பெரமுனவின் மத்திய குழு உறுப்பினர்.
கல்பனா மதுபாஷினி - ஜனதா விமுக்தி பெரமுனவின் சர்வதேச விவகாரப் பிரிவு உறுப்பினர்.
எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாகப் பின்வரும் அரசியல் பிரமுகர்களுடனான சந்திப்புகள் இடம்பெறுகின்றன:
• இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர்.
• பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேசியத் தலைவர்.
• பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேசியப் பொதுச் செயலாளர்கள்.
• பாரதிய ஜனதா கட்சியின் (BJP) பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளின் தேசியச் செயலாளர்கள்.
• டெல்லி தேசியத் தலைநகர் பிரதேச (NCT) அரசின் முதலமைச்சர்.
• டெல்லி தேசியத் தலைநகர் பிரதேச (NCT) அரசின் அமைச்சர்கள்.
• பாரதிய ஜனதா கட்சியின் (BJP) டெல்லி மாநிலத் தலைவர்.
• பாரதிய ஜனதா கட்சியின் (BJP) டெல்லி மாநிலப் பொதுச் செயலாளர்கள்.
• பாரதிய ஜனதா கட்சியின் (BJP) டெல்லி மாநிலப் பிரிவுகள் மற்றும் துறைகளின் செயலாளர்கள்.
ஜேவிபி மீதான டெல்லி அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் திடீர் தோழர் கபிலனின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Post a Comment